கரவ்ளி நகரத்தில் கரவ்ளி கோட்டையில் அமைந்துள்ள இந்த கல்யாண்ஜி கோயில் மஹாராஜாகோபால் சிங் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இது கிருஷ்ணரின் ஒரு அவதாரமான மதனமோகன்ஜிக்கு கட்டப்பட்டுள்ளது.
3 அடி மற்றும் 2 அடி உயரமுள்ள கிருஷ்ணர் மற்றும் ராதா சிலைகள் இந்தக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மஹாராஜாகோபால் சிங் தௌலதாபாத் நகரத்தை வென்ற பின்னர் அவரது கனவில் கிருஷ்ணர் தோன்றி சொன்னதால், இந்த சிலைகளை அஜ்மீர் நகரத்திலிருந்து கொண்டு வந்து கோயிலை நிர்மாணித்ததாக உள்ளூர் கதைகள் கூறப்படுகின்றன.
கரவ்ளி கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் புராதன கட்டிடக்கலைக்கு ஒரு சான்றாக காணப்படுகிறது. இங்கு கர்ப்பகிருகத்தை சுற்றியுள்ள பிரதட்சண பாதையில் பல சித்திரங்களை காணலாம்.
மேலும் இதன் மூலஸ்தான வடிவமைப்பு மற்றும் வெளி மண்டபம் போன்றவை அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை உள்ளடக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ராதை மற்றும் கிருஷ்ணர் தொடர்பான பல திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. ஜன்மாஷ்டமி, ராதாஷ்டமி, கோபாஷ்டமி மற்றும் ஹிந்தோலா போன்ற இந்த திருவிழாக்களில் பயணிகள் பங்கேற்று மகிழலாம்.
மேலும், உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகளுக்காக ஒவ்வொரு அமாவாசையின் போதும் ஒரு சந்தையும் இங்கு நடத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications