Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்ணால் » ஈர்க்கும் இடங்கள் » குருத்வாரா மஞ்ஜி சாஹிப்

குருத்வாரா மஞ்ஜி சாஹிப், கர்ணால்

27

கர்ணால் நகரத்தில் பரபரப்பான சரஃபா பஜார் சாலையில் இந்த குருத்வாரா மஞ்ஜி சாஹிப் எனும் குருத்வாரா அமைந்துள்ளது. NH 1 எனப்படும் கிராண்ட் டிரங்க் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 1 கி.மீ தூரத்திலேயே இது அமைந்திருக்கிறது.

சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் இந்த இடத்திற்கு 1515ம் ஆண்டு விஜயம் செய்துள்ளார். தனது உதாஸி எனும் புனித யாத்திரைப்பயணத்தின் வழியில் இந்த இடத்தி தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இங்கிருந்த நந்தவனத்தில் ஒரு மேட்டின்மீது அமர்ந்தபடி சபாத் கீதங்களை மக்கள் கூட்டத்தின் முன்பு இசைத்ததாக சொல்லப்படுகிறது.

அந்நாட்களில் கர்ணால் நகர மக்கள் சூஃபி பீர் ஞானிகளின் தாக்கத்தில் காணப்பட்டனர். இவர்களில் அபு அலி ஷா கலந்தர் என்பவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

குரு நானக் முன்னால் மக்கள் கூட்டம் திரண்டிருப்பதை இந்த கலந்தர் ஞானியிடம் அவரது பக்தர்கள் தெரிவித்தனர். துரதிருஷ்டவசமாக அபு அலி ஷா கலந்தர் இந்த செய்தியை கேட்டு பொறாமையும் கோபமும் கொண்டார்.

பின் குரு நானக் இருக்கும் இடம் நோக்கி சென்ற இந்த கலந்தர் ஒரு சுவரின்மீது அமர்ந்தபடி தனது அதிசய சக்தியின் மூலம் அந்த சுவர் குரு நானக்கை நோக்கி நகரும்படி செய்துள்ளார்.

இப்படி செய்வதன் மூலம் தனது அபூர்வ சக்திகளை காட்டி குரு நானக்கை திகைக்க வைக்கலாம் என்பது அவரது திட்டமாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த சுவர் குரு நானக்கை நெருங்காது நின்றுவிட்டது. உடனே தனது தவறை உணர்ந்த கலந்தர் ஞானி சுவரை விட்டு இறங்கி குரு நானக்கை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

பின்னர் குரு நானக் அவரிடம் தேவையற்ற அற்புதங்கள் மற்றும் மாந்திரீக விஷயங்களில் நேரத்தை வீணடிக்காமல் மக்கள் முன்னேற்றத்துக்கான காரியங்களில் ஈடுபடும்படி அறிவுரை கூறினார்.

சிக்கியர்களின் ஆறாவது குருவான ஹர்கிஷன் சிங் சாஹிப் அவர்களும் 1663ம் ஆண்டில் டெல்லி நோக்கி பயணித்தபோது இந்த இடத்திற்கு விஜயம் செய்ததாக கூறப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu