Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்ணால் » ஈர்க்கும் இடங்கள் » ஒயசிஸ் காம்ப்ளக்ஸ்

ஒயசிஸ் காம்ப்ளக்ஸ், கர்ணால்

27

ஒயசிஸ் காம்ப்ளக்ஸ் எனும் இந்த வளாகம் கர்ணால் நகர்ப்பகுதியை ஒட்டிய உச்சானா எனும் கிராமத்தில் NH 1 எனப்படும் கிராண்ட் டிரங்க் தேசிய நெடுஞ்சாலையிலேயே அமைந்துள்ளது.

அமைதியும் அழகும் தவழும் கர்ணா ஏரியை ஒட்டி கரையில் அமைந்துள்ள ஒரு ரிசார்ட் விடுதி வளாகமே இந்த ‘ஒயசிஸ் காம்ப்ளக்ஸ்’. படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விதம் விதமான பறவைகளை பார்த்து ரசிக்கும் அனுபவம் போன்றவை இந்த ஏரிப்பகுதியில் பயணிகளை கவர்கின்றன.

இந்த ஏரியை ஒட்டி மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள புல்தரைகளையும் இங்கு பார்த்து ரசிக்கலாம். நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்திருப்பதால் இவ்வழியே செல்லும் எல்லா பயணிகளும் இந்த ஏரிப்பகுதிக்கு தவறாமல் விஜயம் செய்து ஓய்வெடுக்கின்றனர்.

ஏரிக்கும் ஒரு கால்வாய்க்கும் இடையே அமைந்துள்ள காட்டேஜ்களில் தங்கி உள்ளூர் மக்களும் உல்லாசமாக பொழுதுபோக்குகின்றனர்.

ஒயசிஸ் காம்ப்ளக்ஸ் வளாகம் சுற்றுலாப்பயணிகள் பரபரப்பாக இயங்கும் இடமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள ஷாப்பிங் மால், கஃபேடேரியா, ரெஸ்ட்டாரெண்ட், சாட் ஷாப், கிஃப்ட் ஷாப் போன்றவற்றில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி துணி வகைகளை விற்கும் டெல்லி ஹாத் எனும் அங்காடியும் இதனுள் அமைந்துள்ளது. பெட்ரோல் பம்ப், கார் பார்க்கிங், குழந்தைகளுக்கான ஊஞ்சல்கள் போன்ற வசதிகளும் இந்த வளாகத்தில் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri