புக்கா புல் அல்லது முகல் பிரிட்ஜ் என்று அழைக்கபப்டும் இந்த இடம் கர்ணால் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மார்பிள் கற்களால் அமைக்கப்பட்ட சயாத் சன்னதி எனும் வழிபாட்டுத்தலத்துக்கு வெகு அருகே இந்த புக்கா புல் அமைந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் இங்கு மக்கள் திரளாக கூடுகின்றனர்.
அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சன்னதியில் விளக்கேற்றி வைத்து தங்கள் விருப்பங்கள் நிறைவேற வழிபடுகின்றனர். ஒரு சிலர் தங்களை பீடித்திருக்கும் தீராத வியாதிகள் தீர வேண்டிக்கொள்கின்றனர்.
இந்த இடம் முழுதும் சந்தை போன்று மக்கள் திரளும் இடமாக மாறுவதால் வியாபாரிகள் தங்கள் பொருட்களோடு இப்பகுதியில் தற்காலிக கடைகளை பரப்பி வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். பொதுவாக பூஜைக்கு வேண்டிய பொருட்கள் இங்கு வருகை தரும் பக்தர்களால் அதிக அளவில் வாங்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications