Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்ணால் » ஈர்க்கும் இடங்கள் » தரோவாரி

தரோவாரி, கர்ணால்

27

சிறிய நகரமாக இருந்தாலும் இந்த தரோவாரி நகரம் ஹரியானா மாநிலத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். கர்ணால் நகரத்தின் துணை நகரமான இது அங்கிருந்து 11 கி.மீ வடக்கே அமைந்துள்ளது.

இந்திய சரித்திரத்தையே மாற்றி அமைத்த ஒரு முக்கியமான நிகழ்ச்சி இந்த தரோவாரி நகரப்பகுதியில்தான் நிகழ்ந்திருக்கிறது. இங்குதான் முகமது கோரியால் ராஜபுதன வம்சத்தை சேர்ந்த டெல்லி மன்னர் பிரித்விராஜ் தோற்கடிக்கப்பட்டார்.

முதல் முறை இந்த இடத்தில் நடந்த போரில் பிரிதிவிஜ் மன்னரிடம் தோற்ற முகமது கோரி மறு வருடமே இரண்டாம் முறை படையெடுத்து தந்திரமாக ராஜபுதன படைகளை வீழ்த்தினார். அந்த போரின் முடிவிலிருந்துதான்  இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி துவங்க ஆரம்பித்தது.  

இந்த நகரத்தில் தான் மற்றொரு மூர்க்கமான ஆட்சியாளாரான ஔரங்கசீப்பின் புதல்வர் ஆசம்கான் பிறந்துள்ளார். அவர் கட்டிய நகர கோட்டைச்சுவர், மசூதி மற்றும் ஒரு குளம் ஆகியவற்றை இன்றும் இந்நகரில் பார்க்கலாம்.

முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சத்திர அமைப்பு ஒன்று இங்கு காணப்படுகிறது. இதனை சீக்கிய வம்சத்தினர் ஒரு கோட்டையாக பயன்படுத்தியுள்ளனர்.

இந்நகரத்தில் குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப் எனும் வரலாற்று சிறப்பு மிக்க சீக்கிய கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தியாவில் பாசுமதி அரிசி பயிர் செய்யப்படும் முக்கியமான இடங்களில் ஒன்றாக இந்த தரோவாரி பகுதி பிரசித்தி பெற்றுள்ளது. இங்கு விளையும் பாசுமதி அரிசி அதன் சுவைக்கும் தரத்துக்கும்  சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat