கசௌலியிலிருந்து 3 கி.மீ தூரத்தில் கிரேனர் மலை உச்சியில் பாபா பாலக் நாத் கோயில் என்றழைக்கப்படும் இந்த குகைக்கோயில் அமைந்துள்ளது. கசௌலி நகரத்திலுள்ள புகழ்பெற்ற ஆன்மிகத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோயில் சிவபெருமானுடைய முக்கியமான பக்தர்களின் ஒருவரான பாபா பாலக் நாத் எனும் யோகிக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இக்கோயிலில் வேண்டிக்கொண்டால் அவர்களது வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த கோயிலில் சிவபெருமானின் ஏராளமான சிலைகள் வரத்தினால் பிறந்த குழந்தைகளின் புகைப்படங்களோடு காணப்படுகின்றன.
இருப்பினும் குகைக்கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி திருவிழா இந்த கோயிலில் மிகுந்த கோலாகலங்களுடன் கொண்டாடப்படுகிறது.
இந்த கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள ஷாஹ் தலாய் எனும் இடத்திற்கும் பயணிகள் ஒரு கயிற்றுப்பாலத்தின் வழியாக சென்று வரலாம்.



Click it and Unblock the Notifications