Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கசௌலி » ஈர்க்கும் இடங்கள் » சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்

சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கசௌலி

27

சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் அல்லது சி.ஆர்.ஐ என்று அழைக்கப்படும் ஆராய்ச்சி மையம் 1905ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்டிருக்கிறது. இந்த மையத்தின் அழகான வளாகத்தை பார்த்து ரசிப்பதற்காக வருடமுழுவதும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.

பல்விதமான மருத்துவ ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட்டுள்ள இந்த மையம் காலரா, டைபாய்டு, சின்னம்மை மற்றும் பாம்புக்கடி போன்றவற்றிற்கான எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மையத்தின் முதல் இயக்குநராக சர் டேவிட் செம்பிள் என்பவர் இருந்துள்ளார். அவரது தலைமையில் நுண்ணுயிரியல் மற்றும் நோய்த்தடுப்பியல் தொடர்பான பல ஆராய்ச்சிகளில் இந்த மையம் ஈடுபட்டிருந்திருக்கிறது. ரேபீஸ் எனப்படும் வெறிநாய்க்கடி மற்றும் பாம்புக்கடி போன்றவற்றிற்கான மருந்துகளை கண்டுபிடித்த பெருமையை இந்த மையம் பெற்றுள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பணிகள் மட்டுமல்லாமல் பட்டப்படிப்புகளும் இந்த மையத்தால் வழங்கப்படுகின்றன. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையால் நிர்வகிக்கப்படும் இந்த மையம் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை நடத்துகிறது. மருத்துவத்துறையில் தனது சீரிய பங்களிப்புகளுக்காக இந்த மையம் உலகப்புகழ் பெற்றுள்ளது.

தற்போது இந்த மையமானது ‘வேர்ல்டு ஹெல்த் ஆர்கனிசேஷன் எனப்படும் உலக ஆரோக்கிய நிறுவனத்துடன் இணைந்து போலியோ, தட்டம்மை மற்றும் டி.டி.பி போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed