நகரத்தின் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள இந்த மங்கீ பாயிண்ட் கசௌலியின் உயரமான சிகரமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த இடத்திலிருந்து சட்லெஜ் ஆறு, சண்டிகர் நகரம் மற்றும் இமயமலையின் அடிவாரப்பகுதியில் உள்ள உயரமான சிகரமாக பனிபடர்ந்து காட்சியளிக்கும் சூர் சந்தினி சிகரம் போன்றவற்றை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
இந்த சிகரத்தில் ஹனுமானுக்கான கோயில் ஒன்று பக்தர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளட்து. ஹனுமானுக்கான கோயில் வீற்றிருப்பதால்தான் இது குரங்கு மலை எனும் பொருள் தரும் ‘மங்கீ பாயிண்ட்’ என்று அழைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புராணக்கதைகளின்படி சஞ்சீவனி மலையை இமயமலைகளைத்தாண்டி தூக்கிச்செல்லும்போது இந்த மலையில் ஹனுமான் கால் வைத்ததாக சொல்லப்படுகிறது. ஹனுமானின் பாதச்சுவடுகள் இன்றும் இந்த கோயிலில் காணப்படுவதாக ஐதீகம் நிலவுகிறது.
இந்த மங்கீ பாயிண்ட் முழுவதுமே இந்திய விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலை தரிசிக்க இவர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பதோடு கேமராக்களுக்கும் இப்பகுதியில் அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கார் மூலம் அல்லது கால்நடையாக இப்பகுதிக்கு விஜயம் செய்யலாம். மால் ரோடு எனும் இடத்திலிருந்து இரண்டு மணிநேர நடைபயண தூரத்தில் இந்த மங்கீ பாயிண்ட் உள்ளது.



Click it and Unblock the Notifications