ஆரம்ப காலத்தில் ஹவா கர் என்று அழைக்கப்பட்ட இந்த சன்ரைஸ் பாயிண்ட் கசௌலி சுற்றுலாத்தலத்தில் உள்ள அழகான இடமாகும். வருடம் முழுவதும் இந்த பகுதியில் தென்றல் வீசிய வண்ணம் இருப்பதால் இந்த இடம் ஹவா கர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
சூரிய உதயத்தின் அற்புதமான அழகை இந்த இடத்திலிருந்து பயணிகள் பார்த்து ரசிக்கலாம். சூரிய உதய நேரங்கள் பருவத்துக்கேற்றபடி மாறிக்காணப்படுகிறது. இதே பகுதியில் உள்ள சன்செட் பாயிண்ட் எனும் இடத்திலிருந்து சூரிய அஸ்தமனத்தையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications