பைரவ்நாத் கோயில் கேதார்நாத் கோயிலிலிருந்து 0.5 கி.மீ தூரத்திலேயே உள்ளது. இந்த கோயில் சிவனின் முக்கியமான கணமான பைரவருக்காக எழுப்பப்பட்டிருக்கிறது. பிகுந்த் எனும் ராஜபுத்திர வம்சத்தவரால் இந்த கோயில் சிலை ஸ்தாபிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இக்கோயிலின் தெய்வம் இப்பகுதியில் காவல் தெய்வம் அல்லது ஷேத்திரபாலகர் என்று உள்ளூர் மக்களால் வணங்கப்படுகிறது. குளிர்காலத்தில் கேதார்நாத் கோயில் மூடப்படும்போது அக்கோயில் வளாகத்தை இந்த பைரவநாதர் காப்பதாக ஐதீகம்.



Click it and Unblock the Notifications