Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கேதார்நாத் » ஈர்க்கும் இடங்கள் » வாசுகி தால்

வாசுகி தால், கேதார்நாத்

35

வாசுகி தால் என்ற ஏரியின் பெயராலேயே அழைக்கப்படும் இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 4135 மீ உயரத்தில் அமைந்துள்ளது. சுற்றிலும் இமயமலை உயர்ந்த மலைத்தொடர்கள் சூழ்ந்திருக்க அமானுஷ்ய அமைதியுடனும் இயற்கையின் அதிஉச்சமான பிரம்மாண்ட எழிற்தோற்றத்துடன் இந்த ஏரி வீற்றிருக்கிறது.

எனவே உத்தரகண்ட் பகுதியிலேயே கீர்த்தி பெற்ற உன்னதமான எழிற்பிரதேசமாக இந்த வாசுகி தால் ஏரி அறியப்படுகிறது. இந்த ஏரிக்கு விஜயம் செய்யும் சாகசப்பயணிகள் அருகிலுள்ள சௌகும்பா சிகரங்களையும் பார்த்து ரசிக்க முடியும்.

சதுரங்கி மற்றும் வாசுகி என்ற இரு பனிமலைகளை கடந்துதான் இந்த வாசுகி தால் ஏரிக்கு செல்ல முடியும் என்பதால் இந்த மலைப்பயணம் மிகக்கடுமையான ஒன்றாக இருக்கும்.

உடல் வலிமை, மனவலிமை மற்றும் அடிப்படை மலையேற்ற அனுபவம் கொண்டவர்களால் மட்டுமே இந்த இடத்துக்கு பயணம் மேற்கொள்ள முடியும். பயணிகள் ஜுன்  மற்றும் அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட பருவத்தில் இந்த ஏரி ஸ்தலத்திற்கு பயணம் மேற்கொள்வது சிறந்தது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed