Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கேதார்நாத் » ஈர்க்கும் இடங்கள் » சங்காராச்சாரியா சமாதி

சங்காராச்சாரியா சமாதி, கேதார்நாத்

35

கேதார்நாத் கோயிலுக்கு வெகு அருகிலேயே இந்த சங்காராச்சாரியா சமாதி அமைந்துள்ளது. ஹிந்து மரபின் மிக முக்கியமான வேதாந்திகளில் ஒருவரான சங்காராச்சாரியா அத்வைத வேதாந்த கருத்துக்களை பரப்புவதற்காக நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் ஆவார்.

இவர் 8ம் நூற்றாண்டில் கேதார்நாத் கோயிலை புதுப்பித்ததோடு மட்டுமல்லாமல் நான்கு முக்கியமான மடங்களையும் ஸ்தாபித்துள்ளார். வழங்கி வரும் கதைகளின்படி இவர் பத்ரிநாத்திலிருந்த ஜோதிர்மத் ஆசிரமத்திலிருந்து யாத்திரை மேற்கொன்டு கேதார்நாத் மலை வரை சென்று இங்கேயே முக்தியடைந்துள்ளார்.

சங்காராச்சாரியாரின் நான்கு பிரியத்துக்குரிய சீடர்கள் அவரை தொடர முயன்றபோது அவர்களை தவிர்த்துவிட்டு அவர் மட்டும் தனித்து இப்பயணத்தை தொடர்ந்துள்ளார்.

இவரது சமாதி ஸ்தலத்துக்கு அருகில் ஒரு வெந்நீர் ஊற்றும் அமைந்துள்ளது. அவரது சீடர்கள் இப்பகுதியின் குளிர் தாங்காது அவஸ்தைப்பட்டபோது இந்த ஊற்று சங்காராச்சாரியாரால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தம் வாழ்நாளில் சர் தாம்ஸ் எனப்படும் புனிதக்கோயில்களை கண்டறிந்தபின் 32வது வயதிலேயே சங்காராச்சாரியா சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri