கௌரிகுண்ட், கேதார்நாத்

கௌரிகுண்ட் எனும் இந்த சிறிய கிராமம் கேதார்நாத் கோயில் ஸ்தலத்தை நோக்கி மலையேற்றப்பயணத்தை துவங்குவதற்கான கேந்திரமாக விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 1982 மீ உயரத்தில் வீற்றிருக்கும் இந்த ஸ்தலத்தில் பார்வதி தேவிக்கான ஒரு புராதன கோயிலும் அமைந்துள்ளது.

சிவபெருமானை மணம் புரிய வேண்டிய பார்வதி தவமிருந்த இடம் இது என்றும் புராணிக நம்பிக்கைகள் கூறுகின்றன. இங்குள்ள ஒரு வெந்நீர் ஊற்று கௌரிகுண்ட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஊற்று நீருக்கு மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் பக்தர்களின் பாவங்களை கழுவும் தெய்வீக சக்தியும் உள்ளதாக நம்பப்படுகிறது.

Please Wait while comments are loading...