ரம்பரா எனும் இந்த பிரசித்தமான கிராமம் கேதார்நாத்துக்கு பயணம் செய்யும் யாத்ரீகர்கள் ஓய்வெடுக்கும் ஸ்தலமாக அமைந்துள்ளது. இக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து 2591 மீ உயரத்தில் 14 கி.மீ தூரம் கொண்ட கேதார்நாத் மலைப்பாதையின் மத்தியில் வீற்றுள்ளது.
கௌரிகுண்ட் ஸ்தலத்திலிருந்து 7 வது கி.மீ தூரத்தில் உள்ள இந்த ரம்பராவுக்கு அடுத்த 7 கி.மீ தூரத்தில் கேதார்நாத் அமைந்திருக்கிறது. எனவே இந்த ஸ்தலம் கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் தங்கி ஓய்வெடுக்கும் ஸ்தலமாக பயன்படுகிறது. இங்குள்ள GMVN சுற்றுலா விடுதியில் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் கிடைக்கின்றன.