வட்டல் கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஏரி கேதாவில் ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கிருஷ்ணா பரமாத்மாவுடன் பயணப்படும் போது, இந்த இடத்தில் வாழ்ந்த மிருங்கங்கள் மற்றும் மனிதர்களின் தாகத்தை தணிக்க பீம்சென்ஒரு ச்சின்ன குளத்தை வெட்டினார் என்பது நம்பிக்கை.
இந்த குளம் தான் ஏரியாக மாறியது என்று நம்பப்படுகிறது. இந்த ஏரி டகோரா கோவிலுக்கு எதிர்புறம் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு இந்த பெயர் துவாரகாவிலுள்ள கோமதி நதியின் பெயரால் ஏற்பட்டது.
230 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தை சுற்றி பக்தர்கள் தங்குவதற்கு தங்கும் விடுதிகள் பல உள்ளன. இந்த ஏரி நான்கு மேடுகளை கொண்டுள்ளது.
அவைகள் மக்கானி அரோ, கலேஷ்வர் மகாதேவ், பட்ஜி மகாராஜ் மற்றும் டன்க்நாத் மகாதேவ் என்று பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இது புனித ஸ்தலமாக இருந்தாலும், பக்தர்கள் இந்த ஏரியில் படகுச் சவாரியில் ஈடுபட்டும் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.



Click it and Unblock the Notifications