மஸ்தாஃபெட் மில்க்கி-வே அக்வா டூரிஸ்ட் வில்லேஜ் என்றழைக்கப்படும் இந்த சுற்றுலாக்கிராமம் எர்ணாகுளத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் வைப்பின்’ தீவுப்பகுதியில் மலிப்புரம் எனும் இடத்தில் உள்ளது. இங்கு சுற்றுச்சூழலை கெடுக்காத செயல்முறைகளை கொண்டுள்ள மீன்பண்ணை உள்ளது.
கோஷ்ரீ என்று அழைக்கப்படும் பாலத்தினால் இப்பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மில்க்கி வே’ சுற்றுலாத்தலம் ஒரு சிறந்த பிக்னிக் ஸ்தலமாக மட்டுமல்லாமல் இங்குள்ள உணவகங்களுக்காகவும் பிரசித்தி பெற்றுள்ளது.
‘மஸ்தாஃபெட் மில்க்கி-வே அக்வா’ சுற்றுலாக்கிராமம் கடற்கரை கட்டுப்பாட்டுத்துறையின் கீழ் பராமரிக்கப்படுவதால் மாசற்ற, நிசப்தம் நிறைந்த ஒரு விடுமுறை ஓய்வு ஸ்தலமாக காட்சியளிக்கிறது.
மீன்பண்ணையுடன் இணைந்த கடற்கரைப்பகுதியானது பயணிகள் விரும்பக்கூடிய ரம்மியமான இயற்கைச் சூழலையும் கொண்டுள்ளது. புதர்க்காடுகள் நிறைந்த இந்த கிராமப்பகுதி அரசாங்கத்தாலேயே நன்கு பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவதால் பாதுகாப்பான ஸ்தலமாகவும் காணப்படுகிறது.
சந்தடியும் அழுத்தமும் நிறைந்த அன்றாட வாழ்க்கையிலிருந்து விலகி கொஞ்சம் புத்துணர்ச்சியூட்டிக்கொள்ள விரும்பினால் நீங்கள் இந்த மில்க்கி-வே அக்வா சுற்றுலா கிராமத்துக்கு ஒரு முறை விஜயம் செய்யலாம்.