பியர்ஸ் லெஸ்லீ பங்களா எனும் இந்த புராதனமான பாரம்பரிய மாளிகை அதன் கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் வரலாற்றுப்பின்னணிக்காக கொச்சியில் பயணிகளால் அதிகம் விரும்பி ரசிக்கப்படுகிறது. கொச்சி கோட்டைக்கு செல்லும் கடற்கரை சாலையில் கொச்சியிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தூரத்தில், சாலை மார்க்கமாக சுலபமாக சென்றடையும் வகையில் இந்த மாளிகை அமைந்துள்ளது.
1862ம் ஆண்டு காலனிய பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாளிகை ‘பியர்ஸ் லெஸ்லி & கம்பெனியின் நிர்வாக அலுவலகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 19ம் நூற்றாண்டில் பிரபல்யமான காப்பி வர்த்தக நிறுவனமாக செயல்பட்டுள்ளது.
டச்சு, போர்த்துகீசிய மற்றும் பாரம்பரிய கேரள பாணி அம்சங்களைச் சேர்த்து இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. அலங்கார விதான வளைவுகள், சுற்றிலும் சரிந்து நீண்டுள்ள பலகணிகள் மற்றும் பிரம்மாண்டமான அறைகள் ஆகியவை இம்மாளிகையின் சிறப்பம்சங்களாகும்.
இது தவிர, இம்மாளிகை வளாகத்திலேயே இரண்டு வீடுகளும் அமைந்துள்ளன. இவை ‘ஓல்டு ஹார்பர் ஹவுஸ்’ மற்றும் ‘கோடர் ஹவுஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. பல அடுக்குகளைக்கொண்ட இம்மாளிகையின் கீழ்த்தளம் மரப்பலகை சட்டகங்களால் வேயப்பட்டுள்ளது.
மேலும், மாளிகையில் உள்ள கதவுகளில் நுணுக்கமான குடைவு அலங்கார வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. அற்புதமான கைவேலைப்பாட்டு நேர்த்தியால் இவை பார்வையாளர்களை பெரிதும் கவர்கின்றன.



Click it and Unblock the Notifications