Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொச்சி » ஈர்க்கும் இடங்கள் » செயிண்ட் ஃப்ரான்சிஸ் சர்ச்

செயிண்ட் ஃப்ரான்சிஸ் சர்ச், கொச்சி

88

செயிண்ட் ஃப்ரான்சிஸ் சர்ச் என்றழைக்கப்படும் இந்த கிறித்துவ தேவாலயம் இந்தியாவில் முதன்முதலில் கட்டப்பட்ட ஐரோப்பிய தேவாலயம் ஆகும். 1503ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயம் பல தாக்குதல்களையும் எண்ணற்ற இனத்தார்களையும் சந்தித்துள்ளது.

எனவே கொச்சியின் பாரம்பரியத்தில் இது ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. கொச்சி கோட்டைப்பகுதியிலேயே இந்த தேவாலயமும் அமைந்துள்ளது. வாஸ்கோடகாமா எனும் போர்த்துகீசிய கடற்பயணியோடும் இது நெருங்கிய தொடர்பைக்கொண்டுள்ளது.

அதாவது, வாஸ்கோடகாமா 16ம் நூற்றாண்டில் இறந்தபின் இந்த தேவாலயத்தில்தான் அவரை அடக்கம் செய்தனர். பின்னர் 14 ஆண்டுகள் கழித்து அவரது உடல் லிஸ்பன் நகருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

முதன்முதலில் இந்த சர்ச் முழுதும் மரப்பலகைகளால் மட்டுமே எழுப்பப்பட்டிருக்கிறது. அதன்பின் 1506ம் ஆண்டில் ஃப்ரான்சிஸ்கன் ஃப்ரையர் வகுப்பினர் இதனை கற்கள் மற்றும் சுண்ணாம்புக்கலவை கொண்டு உருவாக்கியுள்ளனர்.

இதன் கட்டுமானம் 1516ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. புராடெஸ்டண்ட் பிரிவை சேர்ந்த டச்சுக்காரர்கள் இந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தை கைப்பற்றியபோது இதனை சேதப்படுத்தவில்லை என்பது இதன் பெருமைகளில் ஒன்றாகும்.

பின்னாளில், 1804ம் ஆண்டு டச்சுக்காரர்கள் இந்த ஆலயத்தை ‘ஆங்கிளிகன்’ மதகுருக்களிடம் ஒப்படைத்தபின் இது செயிண்ட் ஃப்ரான்சிஸ் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
06 Sep,Sun
Return On
07 Sep,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
06 Sep,Sun
Check Out
07 Sep,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
06 Sep,Sun
Return On
07 Sep,Mon