Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோஹிமா » ஈர்க்கும் இடங்கள் » ஹார்ன்பில் திருவிழா

ஹார்ன்பில் திருவிழா, கோஹிமா

26

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் நாகாலாந்தின் மிகப்பெரிய திருவிழாவான ஹார்ன்பில் திருவிழா உலகம் முழுவதுமிருக்கும் சுற்றுலாப் பயணிகளை கவரும் நிகழ்ச்சியாகும்.

கோஹிமாவில் இருந்து 12 கிமீ தொலைவில், நாகா மக்களின் வாழ்க்கை மற்றும் வரலாற்றின் சிறப்பம்சங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் கிஸாமா என்ற பாரம்பரிய நாகா கிராமத்தில், ஒவ்வொரு வருடமும் சுற்றுலாத்துறையிரும், கலை மற்றும் கலாச்சார துறையினரும் சேர்ந்து ஹார்ன்பில் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

ஏழு நாட்கள் நடத்தப்படும் இந்த திருவிழாவில் நாகா மக்களின் வளமான மற்றும் துடிப்பான கலாச்சாரம் முழுமையாக பிரதிபலிக்கப்படும். நாகா மக்களின் தலையில் அணியும் ஆபரணத்தில் முக்கியமான அணியாக ஹார்ன்பில் பறவையின் இறகுகள் பயன்படுத்தப்படுவதால் இந்த திருவிழா ஹார்ன்பில் திருவிழா என்ற பெயரை பொருத்தமாக பெற்றுள்ளது.

இந்த திருவிழா கொண்டாட்டங்களில் நடன நிகழ்ச்சிகள், கைவினைப் பொருட்கள், அணிவகுப்பு காட்சிகள், விளையாட்டுக்கள், உணவு கண்காட்சிகள் மற்றும் மத சடங்குகள் ஆகியவை முக்கியமான நடவடிக்கைகளாக இருக்கும்.

இந்த திருவிழாவில் பங்கு கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் நாகா பழங்குடியினரின் பாரம்பரிய ஓவியங்கள், மரத்தால் செதுக்கப்பட்ட சால்லைவகள் மற்றும் நாகா மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல்வேறு வகை சிற்பங்கள் ஆகியவற்றை நினைவுப் பொருட்களாக கொண்டு வர முடியும்.

மேலும், நாகா பழங்குடியினரின் மாவீரர்களைப் பற்றி இந்த திருவிழாவில் பாடப்படும் பாடல் ஒன்றும் இத்திருவிழாவின் மிகப்பெரிய கவர்ச்சியூட்டும் அம்சமாக விளங்குகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jun,Mon
Return On
30 Jun,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jun,Mon
Check Out
30 Jun,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jun,Mon
Return On
30 Jun,Tue