Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோஹிமா » ஈர்க்கும் இடங்கள் » கோஹிமா அருங்காட்சியகம்

கோஹிமா அருங்காட்சியகம், கோஹிமா

26

நாகா பழங்குடியினரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய 360 டிகிரி பார்வையை, பதிவுகளை கொண்டிருக்கும் இடமாக கோஹிமா மாநில அரசு அருங்காட்சியகம் உள்ளது.

1970-ம் ஆண்டு நாகாலாந்து அரசால் பயாவு மலைகளில் உருவாக்கப்பட்ட இந்த மியூசியம், நகரத்தின் மையப் பகுதியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடமாகும்.

இந்த மியூசியத்தில் நாகா பழங்குடியினரின் கலை மற்றும் தொல்பொருட்கள், பழங்கால ஆயுதங்கள், வண்ணமயமான பாரம்பரிய உடைகள், நாகா உணவு வகைகள் மற்றும் பல என நாகா மக்களின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்பு கொண்டுள்ள பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள இடமாக உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் கார்னெலியன், டூர்மலைன், பவளம் மற்றும் பித்தளை, வெள்ளி மணிகளால் செய்யப்பட்ட பல்வேறு தொல்பொருட்கள் என அரிய வகையிலான மதிப்புமிக்க கற்களும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், நாகா பழங்குடியினரின் மதிப்பு மிக்க வண்ணமயமான உடைகளும், அவற்றுடன் லாக் டிரம் என்ற மர மேளம் மற்றும் டட்டி என்ற ஒற்றைத் தந்தி வாத்தியமும் இந்த அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இங்கே தத்ரூபமாக செய்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான நாகா மோருங் என்றழைக்கப்படும் நாகா பழங்குடியினரின் குடில்கள இந்த அருங்காட்சியகத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue