ஜி.போ. ஓ அல்லது ஜெனரல் போஸ்ட் ஆஃபீஸ் என்று அழைக்கப்படும் தலைமை தபால் அலுவலகக்கட்டிடம் கொல்கத்தா நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நகரத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக இந்த கட்டிடம் பிரசித்தி பெற்றுள்ளது. புகைப்படக்கலைஞர்கள் விதவிதமாக இதனை படம் பிடித்துள்ளனர்.
குமிழ் கோபுர அமைப்புடன் வெள்ளை நிறத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் இக்கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். கொல்கத்தா நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாக இது தற்போது புகழுடன் அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications