Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொல்லம் » ஈர்க்கும் இடங்கள் » அலுங்கடவு படகு கட்டுமான தளம்

அலுங்கடவு படகு கட்டுமான தளம், கொல்லம்

43

அலுங்கடவு எனும் இடத்திலுள்ள இந்த படகு கட்டுமான தளத்தில் பயணிகள் விதவிதமான படகுகளும், படகு வீடுகளும் கட்டமைக்கப்படும் அற்புதமான காட்சிகளை பார்க்கலாம்.

கொல்லம் நகரிலிருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ள அலுங்கடவு கிராமம் உப்பங்கழி நீர்த்தேக்கத்தை ஒட்டியே அமைந்துள்ளது. இது இந்தியாவிலேயே முக்கியமான படகுக்கட்டுமான தளமாக புகழ்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கெட்டுவல்லம் எனப்படும் படகுவீடு அமைப்புகள் கேரளாவின் உப்பங்கழி பகுதிகளில் முக்கியமான சுற்றுலாப்போக்குவரத்து அம்சமாக பயன்படுத்தப்படுகிறது. முற்காலத்தில் சரக்குப் போக்குவரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த படகு அமைப்புகள் நாளடைவின் ஒரு வீட்டுக்குரிய எல்லா அம்சங்களுடனும் கட்டமைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் விரும்பும் ஒரு ரசனைக்குரிய அம்சமாக மாறிவிட்டன.

அலுங்கடவு படகு கட்டுமான தளத்தில் உள்ள கலைஞர்களின் திறமையானது எந்த கல்வி நிலையத்திலும் பெறப்பட்டதாக அல்லாமல் தலைமுறை தலைமுறையாக மேம்படுத்தப்பட்டு வம்சாவளியாக பரிமாற்றம் செய்யப்படும் ஒன்றாக விளங்கி வருகிறது.

எந்த விதமான அதிநவீன சாதனங்களோ நடைமுறைகளோ இல்லாமல் பாரம்பரிய நுணுக்கங்களை மட்டுமே கையாண்டு கலையம்சம் நிரம்பிய அதே சமயம் பாதுகாப்பான படகு வடிவங்களை இவர்கள் உருவாக்குவது பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது.

இந்த தளத்திற்கு விஜயம் செய்து - செதுக்கி வார்க்கப்பட்ட பலகைகள் படகுகளாக மாறும் அற்புதத்தை பார்ப்பது - நிச்சயம் நிறைவை தரும் அனுபவமாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu