Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொல்லம் » ஈர்க்கும் இடங்கள் » அட்வெஞ்சர் பார்க்

அட்வெஞ்சர் பார்க், கொல்லம்

43

கொல்லம் நகரின் மையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் இந்த அட்வெஞ்சர் பார்க் எனப்படும் பிக்னிக் ஸ்பாட் அமைந்துள்ளது. அஷ்டமுடி ஏரிக்கரையில் உள்ள இந்த சிற்றுலாத்தலம் உல்லாசமாக பொழுதுபோக்குவதற்கும் ஏற்ற இடமாக காணப்படுகிறது. கொல்லம் நகருக்கு வருகை தரும் பயணிகள் மறக்காமல் விஜயம் செய்யும் இடமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

இந்த ஸ்தலத்தின் முக்கியமான பொழுதுபோக்கு அம்சம் உப்பங்கழி நீர்த்தேக்கத்தில் ‘படகுவீடு பயணம்’ மேற்கொள்வதாகும். இதற்கான வசதிகளை கொல்லம் சுற்றுலா வளர்ச்சி குழுமமே செய்து தருவது குறிப்பிடத்தக்கது.

படகு வீடுகள் மட்டுமல்லாமல் சொகுசு படகுகள், அதிவேக மோட்டார் படகுகள் மற்றும் பவர் படகுகள் என்று பலவிதமான நீர்ப்போக்குவரத்து வாகனங்களை பயணிகள் தங்கள் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம்.

48 ஏக்கர் பரப்பளவைக்கொண்டுள்ள இந்த அட்வெஞ்சர் பார்க் அஷ்டமுடி ஏரிக்கரையில் உள்ள அரசு விருந்தினர் இல்ல வளாகத்திலேயே அமைந்துள்ளது. இதனுள்ளே ஒரு குழந்தைகள் டிராஃபிக் பூங்கா, படகுத்துறை மற்றும் கேரள சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் நடத்தப்படும் ஒரு ஹோட்டல் ஆகியவையும் உள்ளன.

இந்த அட்வெஞ்சர் பார்க்குக்கு அருகிலேயே ‘பாரம்பர்யா மியூசியம்’ எனப்படும் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது. இங்கு பலவிதமான ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri