கொல்லூர் செல்லும் வழியில் குண்டபுராவிலிருந்து 16 கி.மீ தூரத்தில் இந்த மரணகட்டே ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாப்பயணிகள் தரிசிக்கவேண்டிய பல கோயில்கள் அமைந்துள்ளன. இங்குள்ள பிரம்மலிங்கேஷ்வரர் கோயில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
மேலும் இங்கு மூகாம்பிகா தேவி மூகாசுரன் எனும் அசுரனைக்கொன்று ஒரு மரண ஹோமத்தையும் நடத்தியதாக புராணிக ஐதீகக்கதைகள் சொல்லப்படுகின்றன.இந்த கோயில் வாசல் கிழக்கு நோக்கியும் மூலஸ்தான அறை வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது. வட யக்ஷி, மலையாள யக்ஷி, துவாரபாலகர்கள் போன்றவர்களின் சிலைகள் இந்த கோயில்களில் காணப்படுகின்றன.
பிரம்மலிங்கேஷ்வரர், ஷீ ஹைகுலுளி, ஹுலி தேவரு, சிக்கம்மா மற்றும் பரிவாரம் போன்ற பிரதான கடவுள்களின் சிலைகள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
மகர சங்கராந்தி மற்றும் தேர்த்திருவிழா போன்ற திருவிழாக்கள் இந்த கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பயணிகள் இந்த கோயிலை காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மற்றும் மதியம் 3 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் தரிசிக்கலாம்.



Click it and Unblock the Notifications