தேவதாஸ்’ எனும் கானக கடவுளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மஸ்திகட்டே எனும் கோயிலும் பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒரு கோயிலாகும். இந்த கோயிலின் பிரதான கடவுள் சிலைக்கு எந்தவிதமான கூரையோ சுவரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி பூஜைகள் இந்த கோயிலில் ஒரு உள்ளூர் பூசாரியால் செய்விக்கப்படுகின்றன.
இந்த கோயிலின் தெய்வத்துக்கு குழந்தைகளின் வியாதிகளை தீர்க்கும் சிறப்பு சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. தொட்டில்கள், பாக்கு மரப்பூக்கள், வளையல்கள் மற்றும் மணிகள் போன்றவை இங்கு பக்தர்களால் காணிக்கையாக படைக்கப்படுகின்றன. கோயிலைச்சுற்றிலும் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளையும் பயணிகள் ரசித்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications