கொனார்க் நகரத்தில் உள்ள ஆர்க்கியாலஜிகல் மியூசியம் பிரசித்தமான சூரியக்கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. சூரியக்கோயிலின் பழமை மற்றும் புராதன மஹோன்னதங்கள் போன்றவற்றை தெரிந்துகொள்வதற்காக சுற்றுலாப்பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு விருப்பத்துடன் விஜயம் செய்கின்றனர். இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் புராதன அரும்பொருட்கள் சூரியக்கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியக்கோயில் வளாகத்தின் இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த அமைப்புகளும் சிற்பங்களும் 1968ம் வருடத்தில் தற்போதைய மியூசியம் இயங்கிவரும் இடத்திற்கு மாற்றப்பட்டதில் இருந்து இந்த தொல்லியல் அருங்காட்சியகம் செயல்பாட்டிற்கு வந்தது.
260 காட்சிப்பொருட்களை கொண்ட நான்கு காட்சிக்கூடங்கள் இங்கு அமைந்துள்ளன. இவை தவிர ஒடிஷா மாநிலத்தின் வேறு சில முக்கியமான புராதன ஸ்தலங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புராதன அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.
வெள்ளிக்கிழமை தவிர்த்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications