மாயாதேவி கோயில் எனும் இந்த கோயில் கொனார்க் நகரத்தின் சூரியக்கோயில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளது. சாயாதேவி எனும் தெய்வத்துக்காக அமைக்கப்பட்டிருப்பதால் இது சாயாதேவி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு கருவறை மற்றும் முகமண்டபம் அல்லது ஜகமோகனா ஆகிய அமைப்புகளுடன் இந்த கோயில் காட்சியளிக்கிறது.
ஒரு பீட அமைப்பின்மீது அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலின் முகமண்டபம் விரிவான கட்டிடக்கலை நுணுக்கங்களை கொண்டுள்ளது. இந்த கோயிலின் கருவறை அமைப்பு மற்றும் முகமண்டபத்தின் வெளிப்புறங்கள் தற்போது சிதிலமடைந்து காணப்பட்டாலும் உட்புற அமைப்புகள் அற்புதமான சிற்பக்கலை அலங்காரங்களுடன் பார்வையளார்களை பிரமிக்க வைக்கின்றன.
மேலும், இக்கோயிலின் கருவறையில் தெய்வச்சிலைகள் ஏதும் ஸ்தாபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கோண்டலைட் பாறைகள் எனப்படும் பாறை அமைப்புகள் இந்த கோயிலை சுற்றிலும் வரிசையாக காணப்படுகின்றன.
சூரியக்கடவுளின் மனைவியான மாயாதேவிக்காக இந்த கோயில் கட்டப்பட்டிருப்பதாக முன்னர் நம்பப்பட்டு வந்தது. ஆனால் இதுவே ஆதி சூரியக்கடவுள் கோயிலாக விளங்கி வந்திருக்கலாம் எனும் உண்மை தற்போது தெரிய வந்துள்ளது.
சூரியக்கடவுள் கோயிலை தரிசிக்கும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் இந்த மாயாதேவி கோயிலையும் தவறாது பார்த்து ரசிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications