வைஷ்ணவக்கோயில் எனும் இந்த அழகிய கோயில் கொனார்க் நகரத்தில் சூரியக்கோயில் வளாகத்திலேயே அமைந்துள்ளது. சூரியக்கோயிலை சூழ்ந்து அமைந்திருக்கும் பல்வேறு சிறுகோயில்களில் இதுவும் ஒன்று.
சூரியக்கோயில் வளாகத்தில் இயற்கையின் சீற்றத்தில் சிக்கி சேதமடையாமல் மீதமிருக்கும் இரண்டு கோயில்களில் இந்த சிறிய கோயிலும் ஒன்று. இருப்பினும் இந்த கோயிலின் பிரதான கோபுர அமைப்பை தற்போது காணமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வைஷ்ணவக்கோயில் 1956ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது மற்றொரு தகவலாகும்.
பெரிய செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு சுண்ணாம்பு மற்றும் மணல் கலவைப்பூச்சு மூலம் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. யானைகள் குதிரைகள் போன்ற பல்வேறு மிருக உருவங்கள் இந்த கோயிலின் அலங்கார வேலைப்பாடுகளில் இடம் பெற்றுள்ளன.
கடவுள் சிலைகள் மற்றும் மனித உருவங்கள் போன்ற சிற்ப அமைப்புகளும் அதிக எண்ணிக்கையில் இந்த கோயிலில் காணப்படுகின்றன. இங்குள்ள சிற்ப வடிப்புகள் மனித வாழ்க்கையின் கொண்டாட்டமான அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சூரியக்கோயிலுக்கு வரும் பார்வையாளர்கள் இந்த வைஷ்ணவக்கோயிலையும் தவறாமல் பார்த்து ரசிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications