கர்நாடக மாநிலத்திலேயே புகழ் பெற்ற சிவன் கோயில் சொமேஷ்வரர் கோயில் ஆகும். இந்த கோயில் புரா எனும் சிறு கிராமத்தில் உள்ளது. கொப்பல் மாவட்டத்தில் குஸ்தகி தாலுக்காவில் இந்த புரா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த அழகிய கிராமம் சகட்டேபுரா என்றும் அழைக்கப்படுகிறது.ஹொய்சள வம்சத்தின் கட்டிடக்கலை மேன்மைக்கு சான்றாக இந்த சோமேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இந்த கோயிலின் பிரதானக்கடவுளான சிவபெருமான நந்தியின் மீது அமர்ந்த நிலையில் சோமேஸ்வரராக காட்சியளிக்கின்றார். மேலும் இந்த கோயிலில் விஷ்ணு, உமாமஹேஷ்வரர் மற்றும் சப்தமாத்ரிகா சிலைகளும் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications