சிட்டி ஃபோர்ட் பேலஸ் எனப்படும் இந்த கோட்டை அரண்மனையானது கோட்டா நகரத்தில் சம்பல் ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இது ராஜஸ்தான் மாநிலத்தின் பிரம்மாண்ட கோட்டை வளாகங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.
வலிமை பொருந்திய கோட்டைச்சுவர்கள், கொத்தளங்கள், குமிழ் கோபுர மாடங்கள், கைப்பிடி சாரங்கள் ஆகியவற்றுடன் காட்சியளிக்கும் இது அக்காலத்திய அரசர்களின் மஹோன்னதங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ‘ஹாத்தி போல்’ அல்லது ‘யானை வாசல்’ எனப்படும் நுழைவாயில் வழியாக இக்கோட்டைக்குள் நுழையலாம்.



Click it and Unblock the Notifications