ஜக்மந்திர் பேலஸ் எனப்படும் இந்த அரண்மனை எழில் நிறைந்த செயற்கை ஏரியான கிஷோர் சாஹர் ஏரியின் நடுவில் அமைந்துள்ளது. இந்த ஏரி பூந்தி இளவரசர் தேஹ்ரா தேஹ் என்பவரால் 1346ல் கட்டப்பட்டுள்ளது.
சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை கம்பீரமான தோற்றத்தைக்கொண்டுள்ளது. ஏரியில் படகுச்சவாரி செய்யும்போது இந்த அரண்மனையின் நிழல் ஏரியில் அழகாக விழுவதை பார்த்து ரசிக்கலாம்.
கோட்டா மன்னர்களின் பொழுதுபோக்கிற்காக இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. ஜக்மந்திர் அரண்மனைக்கு அருகிலேயே ராஜ சமாதிச்சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ள கேஷார் பாக் எனப்படும் ஸ்தலமும் உள்ளது.



Click it and Unblock the Notifications