பரான் நகருக்கு அருகிலுள்ள பிரபல்யமான ஆன்மிக ஸ்தலம் இந்த சீதாபாரி ஆகும். ஹிந்து புராண ஐதீகத்தின்படி ராமபிரானின் மனைவியான சீதாதேவி தன் மகன்களான லவா மற்றும் குசாவை இங்கு பெற்றெடுத்ததாக நம்பப்படுகிறது. அயோத்தி ராஜ்யத்தை விட்டு வெளியேறி காட்டில் வசிக்கப் புறப்பட்ட சீதாதேவிஇங்கு தன் மகன்களுடன் வசித்ததாக சொல்லப்படுகிறது.
சீதா மற்றும் லட்சுமணனுக்காக கட்டப்பட்டுள்ள கோயில் ஒன்றயும் பயணிகள் பார்க்கலாம். மேலும், இங்கு ஏழு தீர்த்தக் குண்டங்களும் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமான குண்டங்களாக சீதா குண்ட், லட்சுமண் குண்ட, லவ்-குஷ் குண்ட், வால்மீகீ குண்ட் மற்றும் சூர்யா குண்ட் போன்றவை அறியப்படுகின்றன.
காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள சீதா குடி எனுமிடத்தில் இந்த கோயிலும் குண்டங்களும் அமைந்துள்ளன. வருடா வருடம் மே, ஜூன் மாதத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் சஹரியா உற்சவத்தின்போது ஏராளமான பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர். சீதாபாரி மேளா என்ற திருவிழாவும் இந்த ஸ்தலத்தில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications