காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர் என்று அழைக்கப்படும் இந்த வேளாண்மைக்கல்லூரி வெள்ளயானி எனும் இடத்தில் உள்ளது. 1955ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கல்லூரி பல்வேறு வேளாண் அறிவியல் பிரிவுகளில் இளைநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளை வழங்குகிறது.
பெருமை மிக்க இந்த கல்வி நிறுவனம் ஒருகாலத்தில் திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தின் ராஜகுடும்பத்தினர் வசித்த அரண்மனையில் இடம் பெற்றிருப்பது ஒரு விசேஷமான அம்சமாகும்.
மேலும் இந்தியாவிலுள்ள குறிப்பிடத்தக்க முக்கியமான வேளாண் கல்லூரிகளில் ஒன்றாகவும் இது புகழ் பெற்றுள்ளது. பல்வேறு வேளாண் ஆராய்ச்சிகளில் ஈடுபட விரும்பும் மாணவர்களுக்கான எல்லா வசதிகளையும் இக்கல்லூரி கொண்டுள்ளது.
நூற்கல்வி மட்டுமல்லாது செயல் சார்ந்த கல்வியைத் தருவதற்காகவே கிருஷி பவனம் எனப்படும் அமைப்புகள் இதன் அங்கமாக கேரளா மாநிலமெங்கும் உருவாக்கப்பட்டுள்ளன.
வேளாண் துறையில் நல்ல கல்வியை பெற விரும்பும் மாணவர்கள் வடக்குப்பகுதிகளிலிருந்து தென்கோடியிலுள்ள இந்த கல்வி நிலையத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications