கோழிக்கோடு கடற்கரைக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ள இந்த லயன்’ஸ் பார்க் எனும் இந்த உல்லாசப்பூங்கா குழந்தைகளுடன் மாலை நேரத்தை கொண்டாட்டமாக கழிக்க ஏற்ற இடமாகும்.
இந்த பொழுதுபோக்கு பூங்காவில் பலவிதமான விளையாட்டு சவாரி அமைப்புகள் குழந்தைகளுக்காகவே அமைக்கப்பட்டுள்ளன. பிரசித்தமான கோழிக்கோடு பீச் லைட் ஹவுஸ் இந்த பூங்காவுக்கு வெகு அருகிலேயே உள்ளது.
கடற்கரையை ஒட்டியே உள்ளதால் மாலை நேரத்தை உற்சாகமாக கழிக்க இது மிகவும் பொருத்தமான ஸ்தலமாகும். இந்த பூங்காவில் அமர்ந்தபடியே பயணிகள் சூரிய அஸ்தமனத்தை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
தினமும் மாலை 3 மணியிலிருந்து பார்வையாளர்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பூங்காவுக்கு அருகிலேயே ஐஸ்கிரீம் மற்றும் இதர தின்பண்டங்கள் விற்கும் கடைகளும் உள்ளன.
உப்பு மாங்காய் மற்றும் நெல்லிக்காய் போன்றவற்றை விற்கும் நடைபாதை கடைகளும் இங்கு காணப்படுகின்றன. கடற்கரைக்கு விஜயம் செய்யும்போது இந்த பூங்காவுக்கு சேர்த்து விஜயம் செய்வது மனதுக்கு புத்துணர்ச்சியை தருவதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications