திக்கொட்டி லைட் ஹவுஸ், கோழிக்கோடு

திக்கொட்டி லைட் ஹவுஸ் என்றழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் கோழிக்கோடு பகுதியிலுள்ள சுவாரசியமான சுற்றுலா அம்சமாகும். இது கோழிக்கோடு நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் திக்கொட்டி எனும் கிராமத்தில் உள்ளது. பிரசித்தமான இந்த வரலாற்று சின்னம் வருடமுழுவதும் பயணிகளை ஈர்த்து வருகிறது.

இந்த கலங்கரை விளக்கத்தை சுற்றிலுமுள்ள பகுதி பாறை நிலப்பகுதியாக காணப்படுகிறது. இதன்மீதிருந்து அரபிக்கடலில் அமைந்துள்ள வெல்லியம்கல்லு எனும் பாறைத்திட்டு அமைப்பை நன்றாக பார்த்து ரசிக்கலாம். நுரைபொங்கும் அலைகள் மோதும் கரையோர கடற்பகுதியில் அமைந்துள்ள இந்த பாறைத்திட்டுக்கு ஏராளமான புலம் பெயர் பறவைகள் வருகை தருகின்றன.

1847ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கம் உருவானதற்கு ஒரு காரணக்கதையும் சொல்லப்படுகிறது. அதாவது இந்த பாறைப்பகுதி மீது கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளான காரணத்தாலேயே இந்த கலங்கரை விளக்கம் நிர்மாணிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

33.5 மீட்டர் உயரமுள்ள இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி சுற்றிலும் பரவிக்கிடக்கும் இயற்கை எழில் அம்சங்களை பயணிகள் கண்களால் பருகலாம். இருப்பினும் வளைந்து வளைந்து செல்லும் இப்படிகளில் ஏறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Please Wait while comments are loading...