Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிருஷ்ணகிரி » ஈர்க்கும் இடங்கள் » மல்லாசந்த்ரம்

மல்லாசந்த்ரம், கிருஷ்ணகிரி

20

உலகப் புகழ் பெற்ற வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்லறைகளை (Dolmen) புதைபொருள் படிவுகளாக கொண்டிருக்கும் மல்லாசந்த்ரம் என்ற இடம் தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Dolmen- பழங்கால கல்லறைகளை கட்டுவதற்காக வைக்கப்படும் பெரிய பாறையாகும். இந்த வார்த்தையின் அர்த்தம் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தூண் போன்ற கற்கள் பாறையால் மேல் மூடிவைக்கப்பட்டுள்ள இடத்தைக் குறிக்கிறது.

இந்த வடிவமைப்புகள் அதன் சிக்கலான அமைப்பு மற்றும் எண்ணிக்கைகளில் உலகம் முழுவதும் வேறுபட்டிருக்கின்றன. ஒரு பெரிய பாறையால் மூடப்பட்டு, அதனடியில் வட்ட வடிவில் சிறு சிறு குத்துப்பாறைகளாக வைக்கப்பட்டுள்ள அமைப்பினை இங்கு காண முடியும். மல்லாசந்த்ரத்தில் காணப்படும் வகையிலான கல்லறைகளை கேரளாவின் மறையூர் பகுதிகளிலும் காண முடியும்.

இந்த கல்லறைகள் மட்டுமல்லாமல், கற்பாறைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், கெயர்ன் வழிகாட்டி வட்டங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் ஆகியவையும் இப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

இறப்பு மற்றும் அதன் பின் வரும் மறுவாழ்வு தொடர்பான கல்லறைகள், கெயர்ன் வழிகாட்டி வட்டங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் ஆகியவை கண்டிறியப்பட்டுள்ளதால் மல்லாசந்த்ரம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கம் என கருதப்படுகின்றது.

மனித இனத்தை காலம் மற்றும் இடங்களைக் கடந்து வரலாற்றுடனும் இன்றைய காலத்துடனும் தொடர்புபடுத்தக் கூடிய ஓரிரு இடங்களில் மிக முக்கியமான இடமாக இவ்விடம் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Apr,Tue
Check Out
22 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed