நேரம் இருப்பின் குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு வருகை தரும் பயணிகள் இந்த மத்ஸ்ய மற்றும் பஞ்சமி தீர்த்தங்களுக்கும் விஜயம் செய்வது அவசியமாகும். இந்த புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் எல்லாம் தொலையும் என்று ஐதீகமாய் நம்பப்படுகிறது.
மத்ஸ்ய தீர்த்தம் குமாரதார ஆற்றின் கரையிலும், பஞ்சமி தீர்த்தம் ஆற்றின் அருகாமைப்பகுதியிலும் அமைந்துள்ளன. பஞ்சமி தீர்த்தம் சுப்ரமணிய மடத்தின் ஒரு அங்கமாக உள்ளது. இது ஷீ பிருந்தாவன சுவாமிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தீர்த்தங்களுக்கு அருகிலேயே சோமநாதர் கோயில், அக்ரஹார சோம்நாத கோயில் மற்றும் சுப்ரமண்ய மடத்தைச்சேர்ந்த ஷீ வராஹதீர்த்த சுவாமிகளின் சமாதி போன்றவை உள்ளன. பஞ்சமி தினத்தின்போது பக்தர்கள் இங்கு குமாரதாரா ஆற்றில் புனித நீராடுதலை விரும்புகின்றனர்.



Click it and Unblock the Notifications