Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குக்கே சுப்ரமண்யா » ஈர்க்கும் இடங்கள் » சுப்ரமண்யா கோயில்

சுப்ரமண்யா கோயில், குக்கே சுப்ரமண்யா

21

குக்கே சுப்ரமண்யா கோயில்ஸ்தலத்தின் பிரதான அம்சமான இந்த கோயில் குமாரதார ஆற்றின் கரையில் உள்ளது. இந்தக் கோயிலைச்சுற்றிலும் ஆறுகள், மலைகள், வனங்கள் மற்றும் குறிப்பாக குமார பர்வத மலை போன்றவை நிறைந்துள்ளன.

 

இந்தக்கோயில் சிவபெருமானின் இரண்டாவது மகனான முருகக்கடவுளும் பாம்பு ராஜாவான வாசுகியும் உறையும் ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.வெளிமுற்றம் மற்றும் உள்முற்றம் வழியாக பக்தர்கள் இந்தக்கோயிலின் கருவறைக்குச் செல்லலாம். ஒரு பீடத்தின் மீது சுப்ரமண்யர் சிலையும் அருகில் வாசுகிப்பாம்பின் சிலையும் காணப்படுகின்றன.

மற்றொரு ஹிந்து புராண அவதாரமான ஆதிசேஷன் சிலையையும் கருவறையில் பக்தர்கள் பார்க்கலாம்.  கருவறைக்கும் முன்வாசல் அமைப்புக்கும் இடையில் வெள்ளி முலாம் பூசப்பட்ட ஆன கருடத்தூணை பக்தர்கள் காணலாம்.

இந்த தூணின் உள்ளே வாசுகிப்பாம்பு உறைவதாக நம்பப்படுவதால் அதன் விஷமானது பக்தர்களை தாக்காமல் இருப்பதற்காக இந்த வெள்ளி முலாம் பூசப்பட்டுள்ளது.சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கான பூஜைகள் செய்வதற்கான கோயிலாக இது பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த கோயிலின் முக்கிய திருவிழாவான தைப்பூச நாளின் போது இங்கு அதிக அளவில் பக்தர்கள் குவிகின்றனர்.

இது மட்டுமன்றி அஷ்லேஷ பலிபூஜை மற்றும் சர்ப்ப சம்ஸ்காரம் என்ற இரண்டு பெரிய சர்ப்ப தோஷ பூஜைகளும் இந்த கோயிலில் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

குக்கே சுப்ரமண்யா ஹோட்டல்கள்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu