குலு நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இந்த கௌரி ஷங்கர் கோயிலும் ஒன்றாகும். இது 11 -12ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்கிறது. சிவனுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கௌரி ஷங்கர் கோயிலானது குஜரா-பிரதிஹரா பாணியில் கட்டப்பட்ட கடைசிச்சின்னமாக அறியப்படுகிறது.
இந்த கோயிலில் சிற்பவடிப்புகள், கர்ப்பகிருக முன்பகுதி அல்லது சிறிய இருட்டறை ஆகியவை முக்கியமான சிறப்பம்சங்களாக அறியப்படுகின்றன. இந்த இருட்டறையில் விநாயகர், மலர் அலங்கார சித்தரிப்புகள், இசைக்கலைஞன், நடனமங்கை போன்ற சிற்பவடிப்புகள் காணப்படுகின்றன.
ஒரு உயரமான பீடத்தின்மீது பிரமிடு போன்று எழுப்பப்பட்டு உச்சியில் ஒரு குமிழ்வடிவ அமைப்புடன் இந்த கோயிலின் வடிவமைப்பு காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications