Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குமரகம் » ஈர்க்கும் இடங்கள் » குமரகம் கடற்கரை

குமரகம் கடற்கரை, குமரகம்

36

கேரளாவிலுள்ள மிக அழகான கடற்கரைகளில் ஒன்றான குமரகம் கடற்கரையானது ஓய்வெடுப்பதற்கும் உற்சாகப்படுத்திக்கொள்வதற்கும் ஏற்ற ரம்மியமான கடற்கரையாகும்.

நீண்ட மணற்பரப்புடன் காட்சியளிக்கும் இது பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஏற்றதாகும். எந்தவிதமான வியாபார அம்சங்களாலும் பாதிக்கப்படாத ஒரு நிசப்தமான பிரதேசத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது.

இந்த கடற்கரையில் நீச்சல், வாலிபால், ஃபிரிஸ்பீ, நீர்ச்சறுக்கு, அலைச்சறுக்கு, பாய்மரப்படகுச்சவாரி மற்றும் நீர் உடற்பயிற்சி போன்ற பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்களில் சுற்றுலாப்பயணிகள் ஈடுபடலாம்.

நகரத்தின் சந்தடி நிறைந்த வாழ்க்கை முறையிலிருந்து சற்றே விடுபட்டு அமைதியான ஒரு எழிற்பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தயங்காமல் இங்கு வரலாம்.

ஏதேனும் ஒரு புத்தகத்தை வாசித்தபடியோ, சூரிய அஸ்தமனத்தை ரசித்தப்படியோ இயற்கையோடு ஒன்றி இங்கு நேரத்தை கழித்து மனதை லேசாக்கிக்கொள்ளலாம்.

கடற்கரைக்கு அருகிலேயே ஏராளமான ரிசார்ட்டுகள் மற்றும் சுற்றுலாவீடுகள் என்று பலவகைப்பட்ட தங்கும் வசதிகள் உள்ளன. இந்த ரிசார்ட்டுகளில் ஸ்பா எனப்படும் ஆவிக்குளியல்கள் மற்றும் ஆயுர்வேத மசாஜ் போன்ற உடல் ஆரோக்கிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

சொர்க்கம் போன்ற இந்த குமரகம் கடற்கரைக்கு விஜயம் செய்துவிட்டு தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்போது உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சி பரவியிருப்பதை பயணிகள் உணரமுடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed