Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குமரகம் » ஈர்க்கும் இடங்கள் » செரியபள்ளி செயிண்ட் மேரி சர்ச்

செரியபள்ளி செயிண்ட் மேரி சர்ச், குமரகம்

36

குமரகத்திற்கு அருகில் அதிகமான பக்தர்களால் விஜயம் செய்யப்படும் இந்த செரியபள்ளி செயிண்ட் மேரி தேவாலயம் கோட்டயம் நகர மையத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது.

பல நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள இந்த தேவாலயம் 1579ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. மலங்கரா கிறிஸ்துவ இனத்தார் மத்தியில் இது முக்கியமான ஆன்மீக மையமாக கருதப்படுகிறது.

கிறிஸ்துவ மதத்தைச்சேர்ந்த இரு பிரிவினர்க்கு இடையே ஏற்பட்ட ஒரு சச்சரவிற்கான தீர்வாக இந்த தேவாலயம் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஞானான்ய வகுப்பினர் மற்றும் வடக்கும் பாகர் வகுப்பினர் ஆகிய இரு தரப்பினரையும் தெக்கும்கூர் ராஜா மத்தியஸ்தம் செய்துவைத்து, வடக்கும் பாகர் வகுப்பினருக்கு தேவாலயம் எழுப்புவதற்காக மற்றொரு நிலத்தையும் தானமளித்துள்ளார். அவரே தன் மேற்பார்வையில் இந்த தேவலாயத்தை நிர்மாணித்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.

அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களைக்கொண்டுள்ளதால் இந்த தேவாலயம் வரலாற்று மற்றும் கலா ரசிகர்களை பெருமளவில் ஈர்க்கிறது. கேரள பாரம்பரிய மரபு மற்றும் போர்த்துகீசிய கட்டிடக்கலை மரபுகளின் கலவையாக இந்த தேவாலயம் வீற்றுள்ளது.

இந்த தேவாலயத்தின் உட்சுவர்களில் கிறிஸ்துவ மற்றும் கிறிஸ்தவம் அல்லாத சித்தரிப்புகள் காணப்படுகின்றன. ‘வித்துகளுடே பெருநாள்’ (விதைகளின் திருநாள்) எனப்படும் வருடாந்திர திருவிழா இங்கு மிக பிரசித்தமாக ஜனவரி 15ம் நாள் கொண்டாடப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Jun,Thu
Return On
19 Jun,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Jun,Thu
Check Out
19 Jun,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Jun,Thu
Return On
19 Jun,Fri