கர்னூல் நகரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்த ஜகன்னாத கட்டு கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. ஒரு முக்கியமான சிவன் கோயிலான இது கர்னூல் நகரத்தில் பி.தண்டரபாடு எனும் இடத்தில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் வரலாற்று பின்னணிக்காக இந்த கோயில் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமனால் இந்த சிவலிங்கம் எழுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது.
பளிங்குக்கல்லால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிவலிங்கம் 6 அடி உயரமும் இரண்டடி அகலமும் உடையதாக காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications