தென்னிந்தியாவில் மாசுபடாத பெரிய வனப்பகுதிகளில் இந்த நல்லமலா வனப்பகுதியும் ஒன்றாகும். இது கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு அங்கமானநல்லமலா என்றழைக்கப்படும் மலையில் அமைந்துள்ளது.
கர்னூல், குண்டூர், கடப்பா, மஹபூப்நகர் மற்றும் பிரகாசம் எனும் ஐந்து ஆந்திர மாவட்டங்களில் பரவி இந்த வனப்பகுதி வீற்றுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வேட்டை வனமாக இது திகழ்ந்திருக்கிறது.
பிரபல்யமான காட்டுயிர் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளரான கென்னத் ஆன்டெர்சன் இந்த வனப்பகுதியில் சந்தித்தசாகச வேட்டை அனுபவங்களைப்பற்றி தமது நூலில் எழுதியுள்ளார்.
குறிப்பிடத்தக்க புலிகளின் எண்ணிக்கையை பெற்றுள்ள இந்த வனப்பகுதி நாகார்ஜுனசாகர்-ஷீசைலம் புலிகள் சரணாலயத்தின் ஒரு அங்கமாகவும் விளங்குகிறது. சிறுத்தைகளும் இந்த காட்டுப்பகுதியில் வசிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications