மொனாஸ்ட்ரி சர்க்கியுட் என்பது லடாக்கிலுள்ள ஒரு முக்கியமான இடம். இங்கு பர்கா மடம், திக்சே மடம், மாதோ மடம் மற்றும் ஹெமிஸ் மடம் போன்ற எண்ணற்ற மடங்கள் அமையப்பெற்றுள்ளன.
ஹெமிஸ் மடம் லடாக்கிலுள்ள ஒரு மிகப்பெரிய மடமாகும். மிக பெரிய புத்தர் சிலைகளில் ஒன்று இங்கே நிறுவப்பட்டிருக்கிறது. இந்த சிலையை மக்கள் 11 வருடத்திற்கு ஒரு முறை தான் தரிசிக்க முடியும்.
கண் கவரும் வண்ணங்களுடன் இருக்கும் திக்சே மடம், இந்த வட்டாரத்தில் உள்ள இன்னொரு முக்கியமான மடம். இது இதன் 12 அடுக்கு அமைப்பிற்கும், பிரமாண்டமான நுழைவு வாயிலுக்கும், அங்கே உள்ள ஒரு 15 மீட்டர் உயரமான சிலைக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.



Click it and Unblock the Notifications