சிக்கிமின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான ரங்கிட் வாட்டர் வேல்டு சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியங்களை காட்டும் இடமாகும். ரங்கிட் அணைக்கட்டிலிருந்து வெளியேறும் தண்ணீர் நிரம்பிய ஏரியைக் கொண்டு, அழகிய சுற்றுச் சூழலில் இந்த இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லெக்சிப்பிற்கு அருகில் இருக்கும் இந்த இடத்தில் ஆற்று நீர் சறுக்குதல், ஆங்க்லிங், மீன் பிடிப்பு, படகு சவாரி மற்றும் நீச்சல் போன்ற பல விளையாட்டுக்களையும் சுற்றுலாப் பயணிகள் அனுபவித்திட முடியும். இந்த பொழுதுபோக்கு பூங்கா உள்ளூர் மக்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இடமாகும்.



Click it and Unblock the Notifications