லோனாவலாவுக்கு அருகில் ராஜமச்சியில் தக் எனுமிடத்தில் இந்த கோயில் உள்ளது. இந்த கோயிலின் பிரதானக்கடவுளாக சிவன் பைரவர் ரூபத்தில் உள்ளார். கொங்கணப்பிரதேசத்திலுள்ள சிவன் கோயில்கள் போன்று இதன் கலை வடிவமைப்பு காணப்படுகிறது.
அடர்ந்த காட்டுப்பகுதியை பின்னணியில் கொண்டு இந்த கோயில் அமைந்துள்ளது. மெலிதாய் வீசும் காற்றும் குளுமையான சூழலும் இந்த கோயிலுக்கு ஒரு தெய்வீக அமைதியை தருகின்றன.
வழுக்கக்கூடிய ஒரு பாதை வழியாக மட்டுமே இந்த கோயிலை அடைய முடியும். கருவறைக்கு அருகிலேயே மற்ற இந்து கடவுள்களுக்கான சிறு கோயில்களையும் பார்க்க முடிகிறது.
மஹா சிவராத்திரி இந்தக் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களுடன் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications