மஹாராஷ்டிர மாநிலத்தில் லோனாவலா பகுதி மீன் பிடித்தலுக்கு பெயர் பெற்றது என்பது அதிகம் அறியப்படாத ஒரு உண்மையாகும். ஏரிகளும் அணைப்பிரதேசங்களும் இங்கு அதிக காணப்படுவதால் மீன்பிடித்தலுக்கான ஒரு கேந்திரமாக லோனாவலா விளங்குகிறது.
லோனாவலாவில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள கோலி இனத்தவர் வாழும் மீனவக்கிராமமும் உள்ளது. ஆகவே லோனாவலாவில் கோலி மீனவ இனத்தாரின் கலாச்சாரம், வாழ்க்கை முறை, உணவு முறை போன்றவற்றை அவர்களிடையே கலந்து அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இங்கு கிடைக்கின்றது.
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு கோலி மீனவர் உங்களை தன்னோடு மீன் பிடிப்புக்குக்கூட அழைத்துச்செல்லலாம்.



Click it and Unblock the Notifications