லோஹாகர் கோட்டை என்பதன் பொருள் இரும்பு கோட்டை என்பதாகும். இது லோனாவலாவில் சஹயாத்திரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. பாவ்னா ஆற்றுப்படுகையையும் இந்திரயானி ஆற்றுப்படுகையையும் விதத்தில் இது அமைந்துள்ளது.
1050 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோட்டை சத்ரபதி சிவாஜியால் சிறப்பாக பயன்படுத்தப்பட்டும் விதர்பா, மராத்தா போன்ற பல ராஜவம்சங்களுக்கு அரன்மணையாகவும் திகழ்ந்திருக்கிறது.
உங்களுக்கு கட்டிடக்கலை, தொல்லியல் மற்றும் வரலாறு போன்ற விஷயங்களில் ஆர்வம் இருக்குமானால் நிச்சயம் நீங்கள் தவறவிடக்கூடாத இடம் இந்த லோஹாகர் கோட்டையாகும். இந்த கோட்டையின் பிரம்மாண்டமான நான்கு வாயிற்கதவுகளும் இன்றும் நல்ல நிலையில் உறுதியாக காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications