எதிரி எளிதில் அணுகி நுழைய முடியாதபடி கட்டப்பட்டுள்ளது இந்த துங் கோட்டை. கடின்காட் என்று பிரசித்தமாக அறியப்படும் இந்த கோட்டை மராத்தா மன்னர்கள் பயன்படுத்திய கோட்டையாக இருந்திருக்கிறது.
3500 அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்திருக்கும் இந்த கோட்டை செங்குத்தான ஏறும் பாதையை கொண்டுள்ளதால் பயணம் மிக சவாலாக இருக்கும்.சாகச மலையேற்றத்துக்கு சரியான ஸ்தலமாக கருதப்படும் இந்த கோட்டை மீதிருந்து லாக்(ஹ்)’கர் மற்றும் விஸாபூர் கோட்டைகளை உச்சியிலிருந்து பார்க்கும் அனுபவத்தை மலையேறிகள் பெறலாம். துங் கோட்டை லோனாவலாவில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications