சோட்டா இமாம்பாரா அல்லது சின்ன மசூதி என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டுத்தலம் லக்னோ நகரின் முக்கியமான சின்னமாக அமைந்திருக்கிறது. இது ஹுசைனாபாத் இமாம்பாரா என்றும் அழைக்கப்படுகிறது.
1838ம் ஆண்டில் முகமது அலி ஷா எனும் மூன்றாவது ஆவாத் ராஜ்ஜிய நவாப்பால் இது கட்டப்பட்டிருக்கிறது. இது லக்னோ பழைய நகர்ப்பகுதியில் சௌக் எனும் இடத்துக்கு அருகே அமைந்துள்ளது.
நவாப் மன்னரின் கல்லறையாகவே இந்த இமாம்பாரா கட்டப்பட்டிருக்கிறது. இங்கு அவரது மற்றும் அவர் குடும்பத்தாரது சமாதிகள் இடம் பெற்றுள்ளன.
ஒரு பஞ்ச காலத்தின்போது இது எழுப்பப்பட்டதால் இதன் கட்டுமானம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கான உணவு மற்றும் வேலைத்தேவையை பூர்த்தி செய்ததாக சொல்லப்படுகிறது.
தங்கப்பூச்சு கொண்ட வெண்ணிற குமிழ் கோபுரம், தூண் கோபுரங்கள், சுவர்த்தூண்கள் போன்றவற்றை சார்பாக் பாணியில் இது கொண்டிருக்கிறது.
அதிகமாக கண்ணாடி அலங்கார வேலைப்பாடுகள் காணப்படுவது பாரசீக கலையம்சங்கள் பின்பற்றப்பட்டிருப்பதை குறிப்பிடுகிறது. மேலும் சுவர்ப்பகுதிகள் அரபி வாசகங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
முக்கிய திருவிழாக்களின்போது இந்த சோட்டா இமாம்பாரா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுவதால் இதற்கு விளக்கு மாளிகை என்ற பெயரும் உண்டு. இதன் உட்பகுதியில் அமைந்துள்ள சரவிளக்குகள் பெல்ஜியம் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டவை என்பது கூடுதல் தகவல்.



Click it and Unblock the Notifications